கோவை, ஜன. 10: தமிழ்நாட்டின் தொழிற்கல்வி சூழலை வலுப்படுத்தும் வகையில், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் அலகான ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (டிஎன்எஸ்டிசி)யுடன் புரிந்துணர்வு நடந்தது.
இதில், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், ‘‘ஈடுபாட்டுக் கடிதத்தில்” கையெழுத்திட்டு, அதை அதிகாரப்பூர்வமாக பரிமாறிக்கொண்டார். இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம் இயக்குனர் பிரசாத் கலந்து கொண்டார். இந்நிகழ்வு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.
சென்னையில் உள்ள புகழ்பெற்ற வள்ளுவர் கோட்டம் கலையரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான நிகழ்ச்சியில் இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது. இதே விழாவில், ‘தமிழ்நாடு திறன் மாநில அளவிலான போட்டி 2025’-ல் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
