கூடலூர், ஜன. 10: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் கரும்பு, பச்சரிசி, சீனி, ரூ.3000 பணம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று முன் தினம் தொடங்கியது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதயில் லோயர் கேம்ப், குள்ளப்பகவுண்டன்பட்டி, கூடலூர், கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 18 நியாய விலைக் கடைகள் மூலம் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை, துணைத் தலைவர் காஞ்சனா சிவமூர்த்தி, கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கருப்பேந்திரன், லோகந்துரை உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
