ஊராட்சி பள்ளியில் மருத்துவ முகாம்

காளையார்கோவில், ஜன.10: கீழக்கோட்டையில் தேசிய பள்ளி சிறார் உடல் நலத்திட்டத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கீழக்கோட்டையில் தேசிய பள்ளி சிறார் உடல் நலத்திட்டத்தின் சார்பாக மருத்துவ முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆசிரியர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். ஆசிரியை மீனாட்சி வரவேற்றார். மருத்துவர் சுதர்சன், மருத்துவர் வெங்கடேஸ்வரி மாணவ,மாணவிகளின் உடல்நலன்களை பரிசோதித்து மருத்துவ அறிவுரைகள் வழங்கினர். தடுப்பூசி சேவைகள் நலக்குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தல் மற்றும் பரிந்துரை செய்தல் கண்பார்வை குறைபாட்டினை கண்டறிந்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்குதல் வாராந்திர இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகள் வழங்குதல், தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்குதல், மாதவிடாய் நாட்களில் சுகாதாரமான நாப்கின்கள் வழங்குதல், கொசுக்களால் பரவும் நோய்கள் பற்றி விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என்பதை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி எடுத்துக் கூறினார். இதில் செவிலியர்கள் லில்லி கிறிஸ்டி, மஞ்சுளா, மருந்தாளுநர்கள் சுகாசினி, யாசர்அரபத் சிறப்பாக பணியாற்றினர். ஆசிரியை கீதா நன்றி கூறினார்.

Related Stories: