நொய்டா: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த சில தினங்களுக்கு முன் கழிவு நீர் கலந்த குடிநீர் பருகிய 15 பேர் உயிரிழந்தனர். இதேபோல், குஜராத் மாநிலம் காந்தி நகரிலும் அசுத்தமான நீர் பருகிய மக்கள் டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் டெல்டா 1 பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஏராளமானோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
