திருவனந்தபுரம்: சபரிமலை துவாரபாலகர் சிலை தங்க கவச திருட்டு விவகாரத்தில் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரருவை கைது செய்து சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. துவார பாலகர் சிலைகள், கதவு நிலைகளில் பதித்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 2019இல் தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
