உபி எல்லையில் 10 கிலோ வெள்ளியுடன் 2 நேபாளிகள் கைது

மகாராஜ்கஞ்ச்: உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா நேபாள எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர் நேபாள பதிவெண்ணுடன் வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காரில் இருந்த நேபாளத்தின் சித்தார்ட் நகர் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் ரஜக் மற்றும் சமீர் குமார் சிங் ஆகியோரை கைது செய்தனர். காரில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 10 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.

 

Related Stories: