×

தமிழ்நாடு, புதுவை சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பார்வையாளர்கள் நியமனம்

புதுடெல்லி: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் 3 பார்வையாளர்களை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், புதுவை, கேரளாவுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:
தமிழ்நாடு, புதுவை: மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் மற்றும் தெலங்கானா அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி, காசி முகமது நிஜாமுதீன்.
அசாம்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார், காங்கிரஸ் தலைவர் பந்து திர்கே.
கேரளா: ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் , கர்நாடக அமைச்சர் கே ஜே ஜார்ஜ், மாநிலங்களவை எம்.பி. இம்ரான் பிரதாப்கர்ஹி, கன்கயா குமார்.
மேற்கு வங்கம்: சுதீப் ராய் பர்மன், ஷகீல் அகமது கான், பிரகாஷ் ஜோஷி. இந்த அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

Tags : Congress party ,Tamil Nadu ,Puducherry assembly ,New Delhi ,All India Congress Committee ,assembly ,Assam ,West Bengal ,Puducherry ,Kerala ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு