சென்னை: வெற்றிப் படங்களை குவித்து, ஒரு வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் பாக்யராஜ் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரைக்கதை வசனகர்த்தா, கதாசிரியர், இயக்குநர், நடிகர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர் பாக்யராஜ் என திரையுலகில் நடிகர், இயக்குநராக பாக்யராஜ் 50 ஆண்டு காலம் நிறைவு செய்ததை ஒட்டி நடந்த விழாவில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
