உப்பிலியபுரம் அருகே பட்டுப்பூச்சி வளர்ப்பு முறை கல்லூரி மாணவிகளுக்கு விளக்கம்

துறையூர், ஜன. 7: திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே பட்டு வளர்ப்பு நிலையத்திற்கு தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் களப் பயணம் மேற்கொண்டனர். அங்கு விவசாயி சிங்காரம், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பட்டு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். பட்டு பூச்சி முட்டை உற்பத்தி குறித்து மாணவிகளுக்கு விவசாயி விரிவாக விளக்கினார்.

ஒசூரிலிருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான பட்டு பூச்சி முட்டைகள் மூலம் பட்டு பூச்சி வளர்ப்பு மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும் முட்டை வெடித்தல் முதல் கூட்டுப் படலம் உருவாகும் வரை பட்டு பூச்சி வளர்ப்பின் அனைத்து நிலைகளையும் செய்முறையுடன் மாணவிகளுக்கு விளக்கினார்.

பட்டு பூச்சிகளுக்கான உணவாக எம்12 வகை மல்பெரி பயிரிடப்பட்டு பயன்படுத்தப்படுவது குறித்தும் அறிமுகப்படுத்தினார். இந்த களப் பயணம் மாணவிகளுக்கு பட்டு வள ர்ப்பு தொடர்பான நடைமுறை அறிவையும், அனுபவத்தையும் கொடுத்தது.

 

Related Stories: