திருவெறும்பூர், ஜன. 7: திருவெறும்பூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது தோழிகளுடன் விளையாடி கொண்டு இருந்த போது, அங்கு வந்த பரணிகுமார் (54) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகமான 1098விற்கு செல்போனில் தொடர்பு கொண்டு புகார் செய்து உள்ளார்.புகாரின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை செய்ததோடு, சிறுமி மூலம் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செய்தனர்இதையடுத்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பரணிகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
