குண்டூர் 100 அடி சாலையில் பள்ளி வேன், காவலர் டூவீலர் மோதி விபத்து

திருவெறும்பூர், ஜன. 3: திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூரில் 100 அடி சாலையில் தனியார் பள்ளி வேன் மற்றும் காவலர் பயிற்சி பள்ளி காவலரின் டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஜடி பார்க் -குண்டூர் 100 அடி சாலையில் நேற்று காலை நவல்பட்டு நோக்கி தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவ, மாணவிகள் இல்லாமல் காலியாக சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் தலைமை காவலராக பணியாற்றி வரும் மலர்மன்னன் தனது டூவீலரில் சாலையை கடக்க முயன்றார். அப்போது பள்ளிவேனும், டூவீலரும் மோதி விபத்துக்குள்ளானது . இதில் மலர்மன்னன் பலத்த காயமடைந்தார். அங்கு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வேன் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டதுடன் உயிர் தப்பினார். இது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி வெளியானது. நவல்பட்டு ஐடி பார்க் குண்டூர் 100 அடி சாலையில் வாகனங்கள் அதி வேகத்தில் வருவதால் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதனை தடுக்க குறிப்பிட்ட சில இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: