முத்துப்பேட்டை, ஜன. 3: முத்துப்பேட்டை தெற்குதெரு தர்கா உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குதெரு அரபு சாஹீப் பள்ளி வாசல் வளாகத்தில் உள்ள தர்காவின் உண்டியலை யாரோ மர்ம நபர் உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். உண்டியலின் பூட்டை உடைப்பதற்கு முயன்று முடியாததால் சென்றுவிட்டனர்.
பூட்டு சேதமடைந்த நிலையில் இருப்பதை பார்த்து தர்கா கமிட்டி தலைவர் தக்பீர் நெய்னா முகமது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிங்கரவேல் உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
