சென்னை: திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம்-தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும். உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.
வழக்கத்தை மாற்றுவதில் உள்நோக்கம் உள்ளது
இல்லாத ஒரு வழக்கத்தை மாற்றுவது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு வைத்தார்.
சட்டத்துக்கு முரணான தீர்ப்பை ஏற்கமுடியாது – ரகுபதி
சட்டத்துக்கு முரணாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது.
தீர்ப்பு தமிழர்களின் உணர்வுக்கு எதிரானது – ரகுபதி
ஐகோர்ட் மதுரைக் கிளையின் தீர்ப்பு தமிழர்களின் உணர்வுக்கு எதிரானது.
தூணில் தீபமேற்றும் வழக்கம் இல்லை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டுகளாக இல்லை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இல்லை – ஒரு சாரார் இன்று திருப்பரங்குன்றம் விவகாரத்தில் புகுந்து விளையாட பார்க்கிறார்கள். எதற்காக இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்து தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்?.
