ஊட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 120 அடி உயரத்தில் இருந்து உருண்டு விழுந்த மினிபஸ்!!

நீலகிரி: உதகையிலிருந்து தங்காடு சென்ற மினி பேருந்து ஒன்று எதிரில் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவதற்காக சாலையோரம் ஒதுக்கியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்து. விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே இருக்கக்கூடிய தங்காடு கிராமத்துக்கு 35 பயணிகள் உதகையிலிருந்து மினி பேருந்தில் பயன் மேற்கொண்டு வந்தனர். மினி பேருந்துதானது பாலடா பகுதியிலிருந்து மணலாடா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது மினி பேருந்துதானது கட்டுப்பாட்டை இழந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் மினி பேருந்தில் பயணம் செய்த நிலையில், விபத்தில் சுமார் 20 பேருக்கு பாலது காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டு உதகை மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து உதகை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: