மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் பேரணாம்பட்டு பகுதியில்

 

பேரணாம்பட்டு,ஜன.6: பேரணாம்பட்டு பகுதி பண்டாரை வாடை கானாற்று அருகே சப் இன்ஸ்பெக்டர் ராஜ்யூ மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக மாட்டு வண்டியில் இரண்டு பேர் மணல் கடத்தி வந்துள்ளனர். அப்போது போலீசாரை கண்டதும், மாட்டு வண்டியின் ‌உரிமையாளர் சேகர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்பு மாட்டு வண்டியை ஓட்டி வந்த பேரணாம்பட்டு ஓங்குப்பம் ரோடு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பிச்சாண்டி(53) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்து பிச்சாண்டி மீது வழக்கு பதிந்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மாட்டு வண்டி உரிமையாளர் சேகரை தேடிவருகின்றனர்.

Related Stories: