பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துணை மேயர் பங்கேற்பு காட்பாடி- சித்தூர் பஸ் நிலையத்தில்

வேலூர், டிச.30: காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை மேயர், மண்டலத்தலைவர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வேலூர் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும்படி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காட்பாடி-சித்தூர் பஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் துணை மேயர் சுனில்குமார், 1வது மண்டல குழுதலைவர் புஷ்பலதா ஆகியோர் கலந்து கொண்டு, பிளாஸ்டிக் கவர்களை தவிர்ப்போம், மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம் என்றும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மஞ்சள் பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: