வேலூர், டிச.30: பேரணாம்பட்டு அருகே பிளஸ் மாணவியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் பகுதி ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஆனந்தகுமார்(23), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிளஸ்2 மாணவியான 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பேரணாம்பட்டு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில், ஆனந்தகுமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டார்.
கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை வேலூர் போக்சோ கோர்ட் உத்தவு பேரணாம்பட்டு அருகே பிளஸ்2 மாணவி பலாத்காரம்
- வேலூர் போக்சோ நீதிமன்றம்
- Peranampattu
- உத்தவு
- வேலூர்
- கிருஷ்ணமூர்த்தி
- Anandakumar
- ரங்கசமுத்திரம்
- அக்ரஹாரம்
- குடியாத்தம்
