எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரையில் 15 ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்

 

திருவொற்றியூர், ஜன.6: எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரையில் இருந்த 15 ஆக்கிரமிப்பு குடிசைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரைக்கு தினசரி மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். மேலும், விடுமுறை நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வருவதால் சுற்றுலா தளமாக உருவாகி வருகிறது. மக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், சென்னை மெரினா கடற்கரையை போன்று எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரையை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கடற்கரையையொட்டி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். அதன்படி, தாழங்குப்பம் கடற்கரையில் இருந்த 15 குடிசைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.

Related Stories: