பெரம்பூர், ஜன.5: காற்றாடி பறக்கவிட எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடிய போதை சிறுவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் சுதந்தரம் (61). இவர் அதே பகுதியில் சொந்தமாக மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 30ம் தேதி மாலை 3 மணி அளவில், இவரது வீட்டின் மொட்டை மாடியில் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் காற்றாடி விடுவதை பார்த்த சுந்தரம், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், மறுநாள் மாலை அந்த 2 பேர், போதையில் வந்து சுதந்திரம் வீட்டில் இருந்த சிசிடிவி மற்றும் பொருட்களை உடைத்து உடைத்துவிட்டு சென்றனர். இதுகுறித்து சுதந்தரம் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், வியாசர்பாடி புது நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரிந்தது. அவர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் சுதந்தரம் வீட்டை சூறையாடியதும், தொடர்ந்து கஞ்சா போதையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்தனர்.
