காங்கயத்தில் சேவல் சூதாட்டம்: 9 பேர் கைது பைக், கார் பறிமுதல்

காங்கயம், டிச. 31: காங்கயம் கரூர் சாலை வீரணம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சேவல் சூதாட்டம் நடந்தது. காங்கயம் போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்ட கவியரசன் (23), கார்த்திகேயன் (24), மாரிமுத்து (55), காளிபாண்டி (38), ஜெயபிரதா (36), பிரபு (38), கதிரேசன் (48), பெரியசாமி (50) மற்றும் தண்டபாணி (55) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 சேவல், 6,200 ரொக்கப்பணம், 4 பைக், ஒரு காரை பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: