திருச்செங்கோடு: அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. எங்கள் கொள்கை பிடித்தவர்கள் எங்களுடன் வந்து சேருகிறார்கள் என தவெக பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தவெக பொதுச்செயலாளர் அருண்ராஜ் நேற்று அளித்த பேட்டியில், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் கொள்கை. அதிமுகவிலிருந்து விலகி, பலரும் எங்கள் கட்சியில் வந்து சேருகின்றனர். அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. எங்கள் கொள்கை பிடித்தவர்கள், எங்களை பிடித்தவர்கள் எங்களை நாடி வருகிறார்கள். நாங்கள் அரவணைத்து செல்கிறோம் என்றார். ஊழல் புகாரில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவை பற்றியோ, அதிமுகவின் ஊழலைப் பற்றியோ பேசுவதில்லையே ஏன்? என செய்தியாளர் கேட்டபோது, இது குறித்து ஏற்கனவே பேசியாகி விட்டது என கூறினார்.
