வெளியே சென்றவர்கள் ஆண்மையை நிரூபிக்க சவால் பாமகவில் ஏற்பட்ட பிரிவு அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு: திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல்

சிவகங்கை: அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் பலம் இருந்தால், மக்களை சந்தித்தும், மாநாடு நடத்தியும் தங்களது ஆண்மையை நிரூபிக்க வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். சிவகங்கையில் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 296வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் நேற்று அவரது சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம், அவர் தெரிவித்ததாவது: தவெகவை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. தவெகவில் இணைபவர்களுக்கு மக்களிடையே என்ன செல்வாக்கு உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் பலம் இருந்தால், மக்களை சந்தித்தும், மாநாடு நடத்தியும் தங்களது ஆண்மையை நிரூபிக்க வேண்டும். தை பிறப்பிற்கு முன்னர் அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள் இறுதி செய்யப்படும். பாமகவில் பிரிவு ஏற்படுள்ளதால் அதிமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: