பெர்ன் : சுவிட்சர்லாந்து நாட்டில் கிரான்ஸ்-மாட்டானா நகரில் உள்ள பாரில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர். ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ள பனிச்சறுக்கில் ஈடுபடுவோருக்கான பாரில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.30 மணியளவில் மர்ம பொருள் வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
