அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பதிலடி; அமெரிக்கர்கள் மாலி, புர்கினா பாசோவுக்குள் நுழைய தடை

பமாகோ: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைத்தி, ஈரான், லிபியா, சோமாலியா உள்பட பல்வேறு வௌிநாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மாலி, புர்கினா பாசோ, சிரியா, நைஜர், தெற்கு சூடான், லாவோஸ் மற்றும் சியரா லியோன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து அதிபர் டிரம்ப் கடந்த 16ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக மாலி, புர்கினா பாசோவுக்குள் அமெரிக்க மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாலி குடியரசின் வௌியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாலி குடிமக்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அதே நிபந்தனைகள் அமெரிக்க மக்களுக்கும் பொருந்தும். பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. புர்கினா பாசோவின் வௌியுறவு அமைச்சர் கரமோகோ ஜீன்-மேரி டிராரே வௌியிட்டுள்ள அறிக்கையிலும், அதேபோல் காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories: