ராசிபுரம், டிச.22: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ராசிபுரம்-பட்டணம் சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராசிபுரத்தில் இருந்து பட்டணம், வடுகம் வழியாக புதுப்பட்டி -நாமகிரிப்பேட்டை சாலை உள்ளது. இச்சாலையின் பல்வேறு இடங்களில், விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது ராசிபுரம் நகர எல்லையில் இருந்து, பட்டணம் வரையில் உள்ள சாலையை அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. சாலையின் ஒரு பகுதி அகலப்படுத்த, பள்ளங்கள் தோண்டி சிமெண்ட் ஜல்லி கலவையை கொட்டி தார்சாலை அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
