திருச்செங்கோட்டில் 2,106 தேர்வர்கள் பங்கேற்பு

திருச்செங்கோடு, டிச 22: காவல் துறையில் காலியாக உள்ள 1299 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதில் திருச்செங்கோட்டில் நடந்த தேர்வில் 2,106 பேர் பங்கேற்ற நிலையில், 919 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், நடத்தப்படும் காவல்துறை எஸ்ஐகளுக்கான எழுத்துத் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு எழுத 2 ஆயிரத்து 356 ஆண்கள் 669 பெண்கள் என 3025 பேர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுத வந்த போது கடும் சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். அசல் அடையாள அட்டை, ஹால் டிக்கெட் மற்றும் கருப்பு பேனா ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் உள்ளே கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

எலக்ட்ரானிக் சாதனங்கள், செல்போன்கள் வைத்திருக்கிறார்களா என சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பெண்களுக்கு தனி இடம் அமைத்து சோதனை நடைபெற்றது. தேர்வு எழுத 2106 பேர் மட்டுமே வந்திருந்தனர். ஆண்களில் 677 பேரும், பெண்களில் 242 பேரும் தேர்வு எழுத வரவில்லை. நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேர்வு நடப்பதை ஊர்க்காவல் படைத்துறை ஐஜி ஜெயஸ்ரீ ஆய்வு செய்தார்.

Related Stories: