வங்கதேசத்தில் கலிதாவின் மகன் வேட்பு மனு தாக்கல்

டாக்கா: முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் கடந்த 17 ஆண்டுகளாக லண்டனில் இருந்தார். சுயநாடு கடத்தலை முடித்த அவர் கடந்த 25ம் தேதி வங்கதேசத்திற்கு திரும்பினார். இந்நிலையில் பிப்ரவரி 12ம் தேதி நடைபெறும் 13வது தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் போட்டியிடுகின்றனர். இதனை முன்னிட்டு தாரிக் ரஹ்மான் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். டாக்கா கோட்ட ஆணையர் அலுவலகத்தில் பிஎன்பி செயல் தலைவர் தாரிக் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பிஎன்பி தலைவரின் ஆலோசகர்அப்துஸ் சலாம், வங்கதேச மருத்துவர் சங்க தலைமை ஆலோசகர் பர்ஹாத் ஹலீம் ஆகியோர் உடன் இருந்தனர். டாக்கா 17 தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார். 17 ஆண்டுகளாக லண்டனில் இருந்ததால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதனையடுத்து கடந்த சனியன்று தாரிக் மற்றும் அவரது மகள் ஜாமியா ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பதிவு மற்றும் தேசியஅடையாள அட்டை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடித்தனர். நேற்று தாரிக்கை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: