தென்கொரியாவில் நீல மாளிகைக்கு திரும்பிய அதிபர் அலுவலகம்

சியோல்: தென்கொரியாவில் அதிபர் மாளிகையானது பாதுகாப்பு அமைச்சக கட்டிட வளாகத்தில் இருந்து மீண்டும் நீல மாளிகைக்கு மாற்றப்பட்டது. தென்கொரியாவில் அதிபரின் மாளிகையானது சியோலில் அமைந்திருந்தது. இது சியோங் வா டே அல்லது நீல மாளிகை என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அப்போதைய அதிபராக இருந்த யூன் சுக் இயோல் அதிபர் அலுவலத்தை பாதுகாப்பு அமைச்சக வளாகத்திற்கு மாற்றினார். இதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக அதிபர் அலுவலகம் பாதுகாப்பு அமைச்சக வளாகத்திலேயே செயல்பட்டு வந்தது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில் யூன் சுக் இயோல் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து ஜூன் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் லீ ஜே மியுங் வெற்றி பெற்று அதிபரானார். இதனை தொடர்ந்து முதல் முறையாக நாட்டின் பாரம்பரிய அதிபர் மாள்கையான சியோங் வா டேக்கு அவர் முதல் முறையாக பணிக்கு சென்றார். லீ பணிக்கு செல்வதற்கு முன்னதாக அதிகாரிகள் நள்ளிரவில் சியோங் வா டேயில் இரண்டு பீனிக்ஸ் பறவைகள் பொறிக்கப்பட்ட அதிபர் கொடியை ஏற்றினார். இதன் மூலமாக அந்த மாளிகையானது மீண்டும் அதிகாரப்பூர்வ அதிபர் அலுவலமாக மாறியது.

Related Stories: