அமெரிக்காவில் நடுவானில் விபத்து 2 ஹெலிகாப்டர்கள் மோதி பைலட் பலி

நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில், பைலட் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார். அமெரிக்காவில் அட்லாண்டிக் கவுன்டியில் ஹாமண்டன் விமானநிலையத்திற்குட்பட்ட வான்பகுதியில் என்ஸ்ட்ரோம் எப்-28ஏ மற்றும் என்ஸ்ட்ரோம் 280சி ஆகிய 2 ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கின. நடுவானில் ெசன்று கொண்டு இருந்த போது இந்த ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதின. ஹெலிகாப்டர்களில் பைலட் தவிர யாரும் செல்லவில்லை. வானில் வட்டமிட்டபடி தீப்பிடித்து ஹெலிகாப்டர்கள் நொறுங்கி விழும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்தில் ஒரு பைலட் உயிரிழந்தார். மற்றொரு பைலட் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருஹெலிகாப்டர்கள் விபத்து குறித்து விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: