நெருப்பு, சிங்கம் மாதிரி கர்ஜித்த ராமதாசை பொம்மையாக்கிட்டாங்க… சேலத்தில் நடந்தது பொதுக்குழு அல்ல… கேலிக்கூத்து… அன்புமணி ஆதரவாளர் வக்கீல் பாலு சரவெடி

சென்னை அன்புமணி ஆதரவாளர் பாமக வழக்கறிஞர் பாலு சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
நேற்று சேலத்தில் ராமதாஸ் தலைமையில் நடந்தது பாமக பொதுக்குழுவே அல்ல. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் தீர்மானமும் பாமகவை கட்டுப்படுத்தாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நிறுவனரே பேசாமல் நடைபெற்ற கூட்டம் எப்படி பொதுக்குழு கூட்டமாக இருக்க முடியும். அனைவருக்கும் பசிக்கிறது. அதனால் 27 தீர்மானத்தையும் நிறைவேற்றி விட்டதாக அறிவித்து விட்டார்கள். இந்த கூட்டத்தினுடைய ஒரு சிடி எங்களுக்கு போதும். ஏற்கனவே ராமதாஸ் தரப்பை குடிமையியல் நீதிமன்றத்தை நாடும் படி டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அவர்கள் இன்னும் செல்லவில்லை. சேலத்தில் அவர்கள் நிறைவேற்றி இருக்கக்கூடிய தீர்மானங்களை குப்பைத்தொட்டியில் தான் போட வேண்டும்.

பாமகவின் பொதுக்குழு என்று சொல்கிறார்கள். பிறகு, அதில் எப்படி பசுமை தாயகம் என்ற அமைப்பின் தலைவரை மாற்ற முடியும். பசுமைதாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணியை மாற்றிவிட்டதாக சேலத்தில் இன்று அறிவித்திருப்பது செல்லாது. ஒரு செயற்குழுவையும் பொ நேற்று நடைபெற்றது பொதுக் குழுவே அல்ல; அது ஒரு கேலிக்கூத்து. நெருப்பு மாதிரி இருந்தவர் ராமதாஸ். சிங்கம் மாதிரி கர்ஜித்தவரை பொம்மை போல மாற்றி விட்டார்கள்… அவரை ஒரு கூட்டத்தில் அமர வைத்துவிட்டு அது பொதுக்குழுவா செயற்குழுவா என்று கூட தெரியவில்லை. எத்தனை தீர்மானங்களை நிறைவேற்ற போகிறோம் என்று கேட்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி என்ன எடுப்பார் கை பிள்ளையா?.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டணியை அறிவிக்காதது ஏன்?
வக்கீல் பாலு பேசுகையில், ‘கூட்டணியை அறிவிக்க போகிறோம் என்று சொல்லி இருந்தார்களே, அதன்படி ஏன் கூட்டணியை அறிவிக்கவில்லை? ராமதாசை இதற்கு முன்பு ஜி.கே.மணி இயக்கிக் கொண்டு இருந்தார். இப்போது ஸ்ரீகாந்தியும் சேர்ந்து கொண்டிருக்கிறார். யாரோ எழுதிக் கொடுப்பதை ராமதாஸ் படித்துக் கொண்டிருக்கிறார்’ என்றார்.

‘ஜி.கே.மணியை நீக்கியாச்சு’
‘இதற்கு முன்பு வார்த்தைக்கு வார்த்தை ஐயா சின்னையா என்று பேசிக்கொண்டு இருந்த ஜி.கே. மணி இப்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அன்புமணி அன்புமணி என்று ஒருமையில் பேசுகிறார். உலகிலேயே அன்புமணியைபோல சிறந்த மகன் எந்த தந்தைக்கும் அமைய மாட்டார். ஜி.கே.மணியை பாமகவிலிருந்து நீக்கிவிட்டோம். பாமகவுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. அவரை கட்சியை விட்டு நீக்கியதற்கு தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடி விட்டார்கள்’ என்று வக்கீல் பாலு தெரிவித்தார்.

ராமதாஸ் மகளுக்கு ‘வார்னிங்’
‘ஸ்ரீகாந்தி என்றைக்கு கட்சிக்கு வந்தார். மேடையில் வரிசையாக அவர்களது மகன்களை அமர வைத்துக் கொண்டிருக்கிறார். அன்புமணி அவரது தம்பியாக இருந்தால் வீட்டில் அவர் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். ஆனால் பொது வெளியில் வைத்து அவரை ஒருமையில் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர் எங்கள் கட்சியின் தலைவர். அன்புமணி 1998ல் இருந்து பசுமைத்தாயகம் அமைப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். பாமகவிற்காக 27 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். ஸ்ரீகாந்தி எப்போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு வந்தார்? இதற்கு முன்பு ஸ்ரீகாந்தி எங்கே இருந்தார்?’ என்று வக்கீல் பாலு தெரிவித்தார்.

Related Stories: