சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கொடைக்கானலில் இரவு, அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் உறைபனி நிலவக்கூடும் எனவும் சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
