ஜப்பானில் 67 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 2 பேர் பலி: 26 பேர் காயம்; 20 கார்கள் நாசம்

டோக்கியோ: ஜப்பானில் அடுத்தடுத்து 67 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் 26 பேர் காயமடைந்தனர். ஜப்பானில் புத்தாண்டு விடுமுறை தொடங்கி உள்ளது. பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டோக்கியோவின் வடமேற்கே சுமார் 160கி.மீ. தொலைவில் உள்ள மினாகாமி நகரில் நேற்று முன்தினம் இரவு கான் எட்சு விரைவுச் சாலையில் இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதின்.

இந்த மோதலானது விரைவுச்சாலையின் சில பகுதிகளை தடுத்தது. பனி படர்ந்து காணப்பட்டதால் அடுத்தடுத்து வந்த 60க்கும் மேற்பட்டவாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. இதில் ஒரு வாகனத்தில் திடீரென தீப்பற்றிய நிலையில் இது அடுத்தடுத்து 20 வாகனங்களுக்கு பரவியது.

இதில் பல வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வாகனங்கள் எரிந்ததில் காரில் இருந்த ஒரு மூதாட்டியின் சடலமும், லாரியில் இருந்து ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. காயமடைந்த நிலையில் 26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: