பீஜிங்: சீனாவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய தைவான் தனி குடியரசு நாடாக பிரிந்தது. இதை ஏற்க மறுத்து தைவான் மீது சொந்தம் கொண்டாடும் சீனா அதனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறது. தைவானுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, அதற்கு தேவையான ஆயுத உதவிகளையும், போர்ப் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்நிலையில், தைவானுக்கு 11.1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய டிரம்ப் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. டிரம்ப்பின் இந்த அனுமதியால் ஆத்திரமடைந்துள்ள சீனா, அமெரிக்காவின் 20 பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் 10 மூத்த அதிகாரிகளுக்கு அதிரடி தடை விதித்துள்ளது.
