அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி வழக்கு மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு 15 ஆண்டு சிறை: ரூ.30 ஆயிரம் கோடி அபராதம், மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புத்ராஜெய: அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் குற்றவாளி என நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மலேசிய பிரதமராக 71 வயதான நஜீப் ரசாக் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகளாக பதவி வகித்தார். அப்போது மலேசியா மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தவழக்கில் 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பண மோசடி வழக்குகளில் நஜீப் ரசாக் குற்றவாளி என கோலாலம்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும் அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும், இந்த தண்டனைகள் அனைத்தும் நஜீப் ரசாக் தற்போது அனுபவித்து வரும் தண்டனை முடிந்த பிறகு தொடங்கும் என்று நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவேரா அறிவித்தார்.

Related Stories: