ராஜ்கோட்: ஐதராபாத் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் போட்டியில் விதர்பா அணி, 89 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விதர்பா அணியின் துருவ் ஷோரி 77 பந்தில் 109 ரன் குவித்தார். இந்த தொடரில், தொடர்ந்து அவர் விளாசும் 2வது சதம் இது. கடந்த தொடரின் கடைசி 3 போட்டிகளிலும் துருவ் சதம் விளாசியிருந்தார். இதன் மூலம், ஏ பிரிவு போட்டிகளில் தொடர்ந்து 5 சதம் விளாசிய 2வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்த சாதனையை படைத்த முதல் வீரராக தமிழக வீரர் ஜெகதீசன் திகழ்கிறார்.
