உத்தரகாண்டிற்கு எதிரான போட்டியின்போது மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி கேட்ச் பிடிக்க முயன்றபோது பலத்த காயமடைந்தார். ஆஃப் ஸ்பின்னர் தனுஷ் கோட்டி வீசிய 30வது ஓவரில் வலது கை பேட்ஸ்மேன் சவுரப் ராவத் அடித்த பந்து டாப் எட்ஜில் எகிறியது. அதை பிடிக்க முயன்ற அங்கிரிஷ் ரகுவன்ஷியின் துணிச்சலான முயற்சி கைகொடுக்கவில்லை.
மாறாக அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதுடன் அவரது தலை தரையில் பலமாக மோதி மூளையதிர்ச்சி ஏற்பட்டது. உடனே அவரை மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
