மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக சுப்மன் கில் விளையாடி வருகிறார். சூர்யகுமார் யாதவுக்கு அடுத்து டி20 அணிக்கும் அவரை கேப்டனாக நியமிக்க தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடர் மற்றும் டி 20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் கழற்றி விடப்பட்டார். டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் டி 20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர வாய்ப்பில்லை. இதனால் அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
