பல கோடி கருப்பு பணம் கன்டெய்னரில் கடத்தலா?

வடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் போலீசாருக்கு, ஒருவர் போன் செய்து கடலூரில் இருந்து வடலூரை நோக்கி கன்டெய்னர் லாரியில் பலகோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணத்தை கடத்தி வருகிறார்கள். அதை உடனே பிடியுங்கள் என்று சொல்லிவிட்டு இணைப்பை கட் செய்து விட்டார். இதையடுத்து வடலூர் போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நெய்வேலி சாலையில் வந்த கன்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் கடலூரில் இருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றி செல்வது தெரியவந்தது. அதைதொடர்ந்து பெருவெளியில் சந்தேகத்திற்குரிய கன்டெய்னர் நின்றிருந்தது. அதனையும் போலீசார் சோதனை செய்தபோது பணம் ஏதும் பிடிபடவில்லை.

Related Stories: