சட்டசபை தேர்தலில் போட்டியா? நடிகை குஷ்பு பேட்டி

சென்னை: சென்னையில் பாஜ மாநில துணைத்தலைவர் நடிகை குஷ்பு நேற்று அளித்த பேட்டி: எந்த தேர்தல் வந்தாலும் நான் போட்டியிட வேண்டும் என்ற ஆசை எனக்கு வருவதில்லை. மேலிடத்தில் இருக்கும் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி தான் நடப்பேன். அதிமுக-பாஜ கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த தகவல்கள் வதந்திகளே.

இது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலை சந்திக்க உள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்து பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியும் முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: