தேனி,டிச.24: தேனி அருகே வீரபாண்டில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வது எப்படி என தேசிய பேரிடர் மீட்பு படையினர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளித்தனர். தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இயற்கைப் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
அப்போது, விபத்து பாதிப்பு போன்ற ஆபத்தான காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து காட்டினர்.மேலும் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது அங்கு நிலச்சரிவிலும், கட்டுமானங்களுக்குள் சிக்கித் தவித்த பொதுமக்களை எப்படி காப்பாற்றினோம் என்பது குறித்தும் மாணவர்களுக்கு செயல்முறை விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
