தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது

கோவை, டிச.24: கோவை இருகூர் உதயம் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (46). இவர், காஸ் நிறுவனம் ஒன்றில் காசாளராக வேலை செய்து வந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் பீளமேடு பிஆர் புரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (42) என்பவரின் மனைவி ஊழியராக வேலை செய்தார். அப்போது அவர் தனத கணவர் செந்தில்குமார் மதுபோதையில் அடிக்கடி டார்ச்சர் செய்வதாக கூறியுள்ளார்.

தனசேகர் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறிய வந்துள்ளார். இந்த நிலையில் செந்தில்குமார் தனது மனைவி தனசேகருடன் தகாத உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டு அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கு சென்று அங்கு தகராறு செய்தார். மேலும், நிறுவன உரிமையாளரிடம் தனது மனைவியை குறித்து புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தில் இருந்து செந்தில்குமாரின் மனைவியை பணி நீக்கம் செய்து விட்டனர்.

இதற்கிடையே, தனசேகர் நேற்று முன் தினம் பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கே வந்த செந்தில்குமார் அவரிடம் வாக்குவாதம் செய்தார். தன்னிடமிருந்த கத்தியால் அவரின் முதுகில் குத்தினார். இதில், காயமடைந்த தனசேகர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

 

Related Stories: