கோத்தகிரி, டிச. 24: கோத்தகிரியில் காட்டுப்பன்றி, முயலை வேட்டையாட சுருக்கு கம்பி வைத்தவருக்கு வனத்துறையினர் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். கோத்தகிரி அருகேயுள்ள கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட உயிலட்டி கூக்கல் கிராம பகுதியில் விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்ட சோலார் மின்வேலியை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, காட்டு பன்றியை பிடிக்க சுருக்கு அமைத்து வைத்துள்ளதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (41) என்பவர் காட்டுப்பன்றியை பிடிக்க சுருக்கு கம்பி வைத்ததாகவும், விவசாய நிலத்தில் உள்ள குடிசையில் முயல் சுருக்கு கம்பி இருப்பதையும் எடுத்து கொடுத்தார். இதையடுத்து, வனத்துறையினர் ராமகிருஷ்ணன் மீது வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவுபடி ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
