வத்திராயிருப்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

வத்திராயிருப்பு, டிச.24: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக ‘வாக்காளர் என்பதை உறுதி செய்வீர்’ என்னும் கருத்தை வலியுறுத்தி நேற்று வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தாசில்தார் ஆண்டாள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

முத்தாலம்மன் திடல், சத்திரம் தெரு மற்றும் தலகாணி தெரு வழியாக பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவுற்றது. இந்த பேரணியில் கிருஷ்ணன்கோவில் தனியார் கல்லூரி மாணவ, மாணவர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அனைத்து தேர்தல் மேற்பார்வையாளர்கள், வத்திராயிருப்பு பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

 

Related Stories: