பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்..!!

சென்னை: பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளான 24.12.2025 புதன்கிழமை அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை, அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Stories: