பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை!

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, பழைய 6 அணைக்கட்டு கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, முதல் போக பாசனத்திற்கு, 24.12.2025 முதல் 03.03.2026 வரை 70 நாட்களுக்கு, 770.77 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட), தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பெரியம்மாபட்டி, தாமரைக்குளம், அ.கலையம்புத்தூர், மானூர், கோரிக்கடவு மற்றும் கீரனூர் ஆகிய கிராமங்களிலுள்ள 6168 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related Stories: