நிலப்பிரச்சனையில் போலீசாரால் துன்புறுத்தலுக்கு உள்ளான விவசாயிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: நிலப்பிரச்சனையில் போலீசாரால் துன்புறுத்தலுக்கு உள்ளான விவசாயிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த முருகேசன், கார்த்திகை என்பவரிடம் நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்துள்ளார். 2022ம் ஆண்டு கார்த்திகை, அவரது கணவர் கதிரவன் நிலத்தை காலி செய்ய வற்புறுத்தி பயிர்களை சேதப்படுத்தினர். நிலப்பிரச்சனை தொடர்பாக முருகேசன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடர்ந்ததால் எஸ்.ஐ. கோவிந்தராஜ், முருகேசனை சட்டவிரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. எஸ்.ஐ. கோவிந்தராஜ் சித்ரவதை செய்தது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் முருகேசன் புகார் அளித்தார்.

Related Stories: