கூட்டணியை விரிவு படுத்த முடியாமல் திணறும் அதிமுக..! அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய இதுவரை எந்த கட்சியும் விருப்பம் தெரிவிக்கவில்லை

சென்னை: சென்னை வந்துள்ள பியூஷ்கோயல், அதிமுகவிடம் 50க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. தங்களுடன் வரும் சிறு கட்சிகளுக்கும் சேர்த்து பாஜக சுமார் 70 தொகுதிகள் வரை கேட்பதாகவும் கூறப்படுகிறது. ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என இபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், தேமுதிக, பாமக உள்பட எந்த கட்சியும் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை.

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெறும் மையக்குழு கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. வெளி மாநிலத்தில் SIR பணியில் உள்ளதாக அண்ணாமலை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் இன்னும் சற்று நேரத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். இதற்காக சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் தனது நிலைபாட்டை இன்று மாலை அறிவிக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது!

Related Stories: