சென்னை: சென்னையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை எடப்பாடி சந்திக்கிறார். இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோருடன் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார், எம்.ஆர்.சி நகரில் உள்ள ஹோட்டலில் பியூஷ் கோயலுக்கு மதிய விருந்தளிக்கிறார் கே.பழனிசாமி.
