சீர்காழி அருகே பெருந்தோட்டம் ஏரி கரையில் பனை விதைகள் நடும் பணி

சீர்காழி : சீர்காழி அருகே பெருந்தோட்டம் ஏரிக்கரையில் பனை விதை நடும் பணி நடந்தது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பெருந்தோட்டம் ஏரி கரையில் கரைகளை பலப்படுத்தி நீர்நிலைகளை பாதுகாத்து நீர் சுழற்சி முறையை மேம்படுத்துவதற்காக பூம்புகார் பனை அறக்கட்டளை சார்பாக பல ஆண்டுகளாக பனை விதை நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்ற 2024ம் ஆண்டு திருவாலி ஏரி, கீழப்பெரும்பள்ளம் ஏரி, பெருந்தோட்டம் ஏரியின் தென்கரையில் 1000 மேற்பட்ட பனை விதைகள் நடவுநடவு செய்யப்பட்டு முளைத்து வருகின்றன . இதன் தொடர்ச்சியாக, சீர்காழி தாலுக்கா பெருந்தோட்டம் ஏரியின், தென்கரையில் பனை விதை நடவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் பூம்புகார் மேலையூர் ஸ்ரீ முத்தையா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பனை விதை நடவு செய்தனர். குழந்தைகளிடம் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பூம்புகார் பனை அறக்கட்டளையால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சாயவனம் ஆனந்த், பூம்புகார் பனை அறக்கட்டளை நிர்வாகிகள், சிவசுப்பிரமணியன், ஆசிரியர் சேரலாதன், ஆசிரியை இலக்கியா, பிரியா ரவீந்திரன், ராஜலட்சுமி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு முனைவர் ரவீந்திரன் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

Related Stories: