அனைத்து வணிகர்கள் சங்க தொடக்க விழா

ஈரோடு, டிச.22: ஈரோடு நகர தெற்குப்பகுதி அனைத்து வணிகர்கள் சங்கம் தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சங்க தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். செயலாளர் முருகப்பெருமாள் வரவேற்புரை ஆற்றினார்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் திருமூர்த்தி நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில், மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம், மாவட்ட துணைத் தலைவர் நெல்லை ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் தங்கத்துரை, கோவை மண்டல இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், சங்கத்தில் இளைஞரணி பொறுப்பாளர்களை அறிவித்தார். பொருளாளர் செந்தில்குமார் நன்றியுரை ஆற்றினார்.

 

Related Stories: